அருட்செல்வம், & பெர்னாண்டோ
கால் புண் பராமரிப்பு. (ஜெ. அருட்செல்வம், எட்.)Colombo: New Karunadhara Press, Colombo 10.
Publication year: 2021

வெரிக்கோஸ் நாளங்கள்  மற்றும் காலில் காணப்படும் பிற  நாளங்களில் நீண்டகாலமாக ஏற்படும் நோய்களால் (Chronic Venous Disease) உருவாகும் காயங்கள், பொதுவாக காணப்படும் பிரச்சனை ஆகும். நீண்டகாலம் குணமாகாமல் காணப்படும் காயங்களுக்கு மிகப் பொதுவான காரணம் நாளங்களில் ஏற்படும் நீண்டகால நோய்கள் ஆகும். இவ்வாறு நாளங்களில் ஏற்படும் நீண்டகால நோய்கள்  காரணமாக ஏற்படும் காயங்களை குணப்படுத்துவதற்கு நோயாளிகள் சில விடயங்களை அறிந்திருப்பது அவசியமாகும். அத்துடன் வைத்தியரினால் வழங்கப்படும் அறிவுரைகளை பின்பற்றுவதும் மிகவும் அவசியமாகும். ஆனால் வேலைப்பளு நிறைந்த சிகிச்சை நிலையங்களில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் அறிவுரைகளை நோயாளிகள் விளங்கிக் கொள்வது மிகவும் கடினம் என்பதை நான் அவதானித்து உள்ளேன். அதனால் நான் காயங்கள் சம்பந்தமான மருத்துவ தகவல்கள் மற்றும் அறிவுரைகளை ஒரு புத்தக வடிவில் எழுத தீர்மானித்தேன். இவ்வாறு செய்வதால் நோயாளி மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை தனது வீட்டில் ஓய்வாக இருக்கும் வேளைகளில் வாசித்து தெரிந்து கொள்ள முடியும். இப்புத்தகத்தை வெளியிடுவதன் மூலமாக காயங்கள் சம்பந்தமான நோயாளியின் அறிவு விருத்தி அடைவதோடு, வைத்தியர்களால் வழங்கப்படும் அறிவுரைகளையும் நோயாளி பின்பற்றுவார் என நம்புகின்றேன். இவ்வாறு செய்வதால் காயத்தை குணமாக்குவது இலகுவாகும்.

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *